தந்தையை வெட்டிக்கொன்ற விவசாயி கைது
குத்தாலம் அருகே நிலத்தை பிரித்து தராததால் தந்தையை வெட்டிக்கொன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
குத்தாலம்:
குத்தாலம் அருகே நிலத்தை பிரித்து தராததால் தந்தையை வெட்டிக்கொன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
நிலத்தை பிரித்து கேட்டனர்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மாதிரிமங்கலம் புது தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 86) விவசாயி. இவருடைய மனைவி ஜெயம் (80). இவர்களுக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
கலியபெருமாளுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை மகன்களும், மகள்களும் பிரித்துக் தர வேண்டும் என கேட்டு வந்துள்ளனர்.
அரிவாளால் வெட்டிக்கொலை
இந்த நிலையில் நேற்று மதியம் கலியபெருமாளின் 2-வது மகன் விவசாயியான பிரகாஷ் (55), நிலத்தை தனக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என தந்தையிடம் கேட்டுள்ளார்.
அதற்கு கலியபெருமாள் நிலத்தை பிரித்து கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் அருகில் கிடந்த அரிவாளை எடுத்து கலியபெருமாளை வெட்டினார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிேலயே கலியபெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
கைது
இதுகுறித்து தகவல் அறிந்த குத்தாலம் போலீசார், கலியபெருமாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த பிரகாசை கைது செய்தனர்.
பரபரப்பு
நிலத்தை பிரித்து தராததால் தந்தையை மகன் ெவட்டிக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.