மனைவியை கத்தியால் குத்திய விவசாயி


மனைவியை கத்தியால் குத்திய விவசாயி
x

கன்னிவாடி அருகே மனைவியை கத்தியால் குத்திய விவசாயி கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

கன்னிவாடி அருகே உள்ள தருமத்துப்பட்டி, கோம்பை ரோட்டில் வசித்து வருபவர் ஆறுமுகம் (வயது 45). விவசாயி. அவருடைய மனைவி முத்துவேல் (40). இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.

அதன்படி நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், தான் வைத்திருந்த கத்தியால் முத்துவேலை குத்தினார். இதில் காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கன்னிவாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story