குட்டையில் தேக்கி நிற்கும் தண்ணீர்


குட்டையில் தேக்கி நிற்கும் தண்ணீர்
x

குட்டையில் தேக்கி நிற்கும் தண்ணீர்

திருப்பூர்

அருள்புரம்

பி.ஏ.பி .வாய்க்கால் நீரை வீணடிக்காமல் குட்டைகளில் விவசாயிகள் தேக்்கி வைத்துள்ளனர்.

பி.ஏ.பி. வாய்க்கால்

திருப்பூர் மாவட்டத்தின் பிரதான நீராதாரம் திருமூர்த்தி, அமராவதி ஆகிய அணைகள்தான். இதில் திருமூர்த்தி அணையில் இருந்து வரும் பி.ஏ.பி. வாய்க்கால் பிரதான இடத்தை பிடித்துள்ளது. பி.ஏ.பி.வாய்க்கால் மூலம் நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகிறது.

இதனால் விவசாயிகள் விளைநிலங்களை ஊழுது மக்காச்சோளம் மற்றும் இதர பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து வரும் நீரை வீணடிக்காமல் கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரம் மற்றும் காளிநாதம்பாளையம் குட்டைகளில் விவசாயிகள் தேக்கி வைத்துள்ளார்கள்.

பி.ஏ.பி. வாய்க்காலில் பாசனத்திற்காக வரும் நீரை பாசனத்திற்கு பயன்படுத்திய பிறகு மீதி உள்ள நீரை அருகில் உள்ள குட்டையில் தேக்கி வைக்கப்படுகிறது. இதனால் அல்லாளபுரம் மற்றும் காளிநாதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் 20 மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் மற்றும் விவசாயம் செய்ய பயன்படுகிறது.

குடிநீர் தட்டுப்பாடு இல்லை

மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுவதில்லை. இது போல் மற்ற பகுதிகளிலும் பயன்படுத்தினால் நீர் வீணடிக்காமல் குட்டைகளில் தேக்கி வைக்கும் போது நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்து விவசாயம் செழிப்பாக இருக்க உதவுகிறது என்று விவசாயிகள் ெதரிவித்தனர்.

-


Next Story