விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்
x

வியாபாரிகள் நெல் கொள்முதல் நிறுத்தத்தை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

தேசிய அளவில் கடந்த 3 மாதங்களாக ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் இ-நாம் செயலி மூலம் விவசாய பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த செயலி மூலம் கொள்முதல் விலை நிர்ணயம் தவறாக பதிவேற்றம் செய்தால் அதை திருத்துவதற்கு வழியில்லை போன்ற பல்வேறு இணைய வழி சிக்கல்கள் உள்ளதாக கூறி வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்யாமல் நிறுத்தம் செய்தனர்.

வியாபாரிகள் கொள்முதல் நிறுத்தம் செய்ததை கண்டித்தும், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்தும் விவசாயிகள் சங்கம் சார்பில் முகத்தில் விலங்குகளின் முகமுடி அணிந்து வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனை கூடம் வளாகத்தில் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story