விவசாயிகள் சங்கத்தினர் டார்ச்லைட் அடித்து ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் சங்கத்தினர் டார்ச்லைட் அடித்து ஆர்ப்பாட்டம்
x

நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்கக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் டார்ச்லைட் அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம்

திருவாரூர்

நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்கக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் டார்ச்லைட் அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு, தேர்தல் வாக்குறுதியின்படி நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500, கரும்பு டன் ரூ.4,000 விலை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். மின்சார சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். விவசாயிகளின் 13 மாத கால போராட்ட கோரிக்கைகளை ஓப்புதல் அளித்தப்படி மத்திய அரசு உடன் அமல்படுத்திட வேண்டும்.

உரி தேங்காய்களுக்கு கிலோ ரூ.50-க்கும், கொப்பரை தேங்காய் ரூ.150-க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் திருவாரூர் பழைய பஸ்நிலையம் அருகில் செல்போனில் டார்ச் லைட் ஒளிவீச்சில் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய செயலாளர் தியாகராஜன், நகர செயலாளர் பாலதண்டாயுதம் ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய தலைவர் சவுரிராஜன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் செல்வம், ஒன்றிய செயலாளர் நாகராஜன், நகர துணை செயலாளர் தர்மதாஸ், ஒன்றிய துணை செயலாளர் பார்த்திபன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சிவப்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசை மாநில டார்ச் லைட் அடித்து ஆர்பபாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில செயலாளர் மாசிலாமணி, தலைமை தாங்கினார்.இதில் மாவட்ட துணைத் தலைவர் உலகநாதன், செயற்குழு உறுப்பினர் சந்திர ராமன், ஒன்றிய செயலாளர் ஜெயபால், நகரச் செயலாளர் சுந்தர் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தேர்தல் வாக்குறுதி படி நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

நீடாமங்கலம்

இதேபோல நீடாமங்கலத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் டார்ச்லைட் அடித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் பாரதிமோகன் தலைமை தாங்கினார்.

இதில் ஒன்றிய பொருளாளர் முகமதுரபி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணைச் செயலாளர் ஞானமோகன், விவசாயிகள் சங்க மாவட்டபொருளாளர் ராவணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டு தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள எழுப்பப்பட்டன.

--


Next Story