மத்திய அரசை கண்டித்து விவசாய சங்கத்தினர் போராட்டம்
ஸ்ரீவைகுண்டம், கயத்தாறில் மத்திய அரசை கண்டித்து விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவைகுண்டம்,:
ஸ்ரீவைகுண்டம், கயத்தாறில் மத்திய அரசை கண்டித்து விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகர் எரிப்பு போராட்டம்
மத்திய அரசின் பட்ஜெட்டில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் விரோதமாக அறிக்கை சமர்பித்து இருக்கிறது இதைகண்டிக்கும் விதமாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் இணைந்து மத்திய அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடத்தினர்.
ஸ்ரீவைண்டம் பழைய தாலுகா அலுவலகம் அருகில் நடந்த இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். போராட்டத்தின் போது விவசாயிகள் நகல் எரிக்க முயன்றபோது போலீசார் தடுத்துநிறுத்தினர். இதில் மாவட்ட செயலாளர் புவிராஜ், மாவட்ட பொருளாளர் நம்பிராஜன், மாவட்ட துணை தலைவர் கணபதி, மாவட்ட குழு உறுப்பினர் மணி, ஒன்றிய பொருளாளர் ராமலிங்கம், ராமச்சந்திரன், சின்னத்துரை செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
கயத்தாறு
இதேபோல் கயத்தாறில் கம்யூனிஸ்டு கட்சியினர், தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சங்க தலைவர் சீனிபாண்டியன் தலைமை தாங்கினார்.
இதில் கட்சியின் ஒன்றிய செயலாளர் சாலமன்ராஜ், ஒன்றிய தலைவர் தேவமணி, தூத்துக்குடி மாவட்ட விவசாய சங்க செயலாளர் புவியரசன், மாவட்ட குழு உறுப்பினர் மாரியப்பன், மகளிர் அணி பேச்சியம்மாள், காந்தியம்மாள் உள்பட 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.