விழுப்புரத்தில் டிரைவரை அமர வைத்து ஜீப் ஓட்டி வீட்டில் விட்ட பெண் கல்வி அதிகாரி ஓய்வுபெற்ற நாளில் இன்ப அதிர்ச்சி


விழுப்புரத்தில்  டிரைவரை அமர வைத்து ஜீப் ஓட்டி வீட்டில் விட்ட பெண் கல்வி அதிகாரி  ஓய்வுபெற்ற நாளில் இன்ப அதிர்ச்சி
x
தினத்தந்தி 2 Jun 2022 11:57 PM IST (Updated: 2 Jun 2022 11:59 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் பணி ஓய்வுபெற்ற டிரைவரை ஜீப்பில் அமர வைத்து பெண் கல்வி அதிகாரி ஜீப்பை ஓட்டி சென்று வீட்டில் விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் கடந்த 32 ஆண்டுகளாக ஜீப் டிரைவராக பணியாற்றியவர் சக்கரபாணி. இவர், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி கிருஷ்ணபிரியாவுக்கு ஜீப் ஓட்டினார். சக்கரபாணி நேற்று முன்தினம் பணி ஓய்வுபெற்றார். இதையடுத்து அவருக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் முதன்மைக்கல்வி அதிகாரி கிருஷ்ணபிரியா தலைமையில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. விழா முடிந்ததும் யாரும் எதிர்பாராதவகையில் ஜீப்பில் தான் வழக்கமாக அமர்ந்து பயணம் செய்யும் இருக்கையில் டிரைவர் சக்கரபாணியை கிருஷ்ணபிரியா அமர வைத்தார். பின்னர் அந்த ஜீப்பை முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணபிரியா ஓட்டிக்கொண்டு சக்கரபாணியின் வீட்டுக்கு சென்றார். அங்கு சக்கரபாணியை அவர் வீட்டுக்குள் அழைத்துச்சென்று விட்டார். ஓய்வுபெறும் நாளில் இன்ப அதிர்ச்சியில் திகைத்து போன டிரைவர் சக்கரபாணி மற்றும் அவரது குடும்பத்தினர் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிக்கு நன்றி தெரிவித்தனர்.


Next Story