கோடி அற்புதர் புனித அந்தோணியார் திருத்தல திருவிழா தொடங்கியது
சேலம் ஜான்சன்பேட்டை கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலய திருவிழா தொடங்கியது.
புனித அந்தோணியார் ஆலயம்
சேலம் ஜான்சன்பேட்டை கோடி அற்புதர் புனித அந்தோணியார் திருத்தலத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 1-ந் தேதி தொடங்கியது. விழா 12 நாட்கள் நடக்கிறது. கொடியேற்று விழாவுக்கு சேலம் மறைமாவட்ட முதன்மை குரு மைக்கேல் ராஜ் செல்வம் முன்னிலை வகித்தார். சேலம் மறை வட்ட முதன்மை குரு அழகுசெல்வம் அர்ச்சிப்பு செய்து புனிதரின் கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.
நவநாள் திருப்பலிகளை பல்வேறு ஆலய பங்குதந்தையர்கள் மரிய சூசை, மறைமாவட்ட பொருளாளர் ஜேக்கப், விமல், தியோடர் செல்வராஜ், ஜெம் பெர்னார்ட் ஜோசப், அமல் மகிமைராஜ், பிலவேந்திரம், தாமஸ் மாணிக்கம், கிரகோரிராஜன், ஸ்டேன்லி, ஜான்போஸ்கோ பால் ஆகியோர் திருப்பலிகளை நிறைவேற்றினர்.
கூட்டுத்திருப்பலி
வருகிற 11-ந் தேதி நற்கருணை வழங்கும் விழா நடக்கிறது. மறைமாவட்ட முதன்மை குரு மைக்கேல்ராஜ் செல்வம் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலி நிறைவேற்றி குழந்தைகளுக்கு வழங்குகிறார். வருகிற 13-ந் தேதி சேலம் மறைமாவட்ட ஆயர் அருட்செல்வம் ராயப்பன் தலைமையில் திருவிழா கூட்டு திருப்பலி நிறைவேற்றி இறையாசி வழங்க உள்ளார்.
அன்று மாலையில் திருப்பலியை புதிய குருக்களான பிரான்சிஸ் சேவியர், மைக்கேல் அருள்ராஜ், ஜான் சத்தியசீலன் ஆகியோர் நிறைவேற்ற உள்ளனர். தொடர்ந்து புனிதரின் ஆடம்பர தேரானது மந்திரிக்கப்பட்டு ஜான்சன் மாநகரை சுற்றி பவனியாக வந்து ஆலயத்தை வந்தடைகிறது. நற்கருணை ஆசியோடு திருவிழா நிகழ்வுகள் நிறைவடைகிறது.
விழா ஏற்பாடுகளை பங்குதந்தை அந்தோணி மரிய ஜோசப் தலைமையில் ஆலய விழாக்குழுவினர் செய்துள்ளனர்.