அருணாசல ஈசுவரர் கோவிலில் திருவிழா நடைபெற்றது.
அருணாசல ஈசுவரர் கோவிலில் திருவிழா நடைபெற்றது.
விருதுநகர்
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருணாசல ஈசுவரர் கோவிலில் ஆவணி மூல திருவிழா மற்றும் வருடாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், அபிஷேகம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து அருணாசல ஈசுவரர் முனிவர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து உண்ணாமலை அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை துணை போலீஸ் சூப்பிரண்டு ப்ரீத்தி தொடங்கி வைத்தார். இதில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செயதனர். இதற்கான ஏற்பாடுகளை பொதுநலப்பண்டு நிர்வாகிகள் செய்தனர்.
Related Tags :
Next Story