'தி கேரளா ஸ்டோரி' படத்தை தடை செய்ய வேண்டும்


தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 5 May 2023 12:30 AM IST (Updated: 5 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்ட இஸ்லாமிய நலக்கூட்டமைப்பினர் ‘தி கேரளா ஸ்டோரி' படத்தை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

தேனி

தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு இஸ்லாமிய நலக்கூட்டமைப்பு தலைவர் சையது இஸ்மாயில் தலைமையில், செயலாளர் நிஜாத் ரஹ்மான், கிறிஸ்தவ மக்கள் நல பேரமைப்பு தலைவர் நாகராஜன், சமுக நல்லிணக்கப்பேரவை தலைவர் முகமதுசபி மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் நேற்று வந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் அவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், 'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படம் முற்றிலும் மத விரோதத்தை தூண்டக்கூடிய இஸ்லாமிய மார்க்கத்தை தவறாக சித்தரித்து எடுக்கப்பட்ட படம் என்பதை அறிவீர்கள். இந்த படம் வெளியிடப்பட்டால் நாட்டில் போராட்டங்களும், சமூகங்களுக்கு மத்தியில் மதத்தால் பிரிவினையும் ஏற்படும் என்பதையும் அறிவீர்கள். தேனி மாவட்டத்திலும், தமிழகம் மற்றும் நாடு முழுவதும் அனைத்து மதத்தினரும் நல்ல உறவுகளாக உள்ளோம். இப்படத்தால் பிளவுகளும், நாட்டின் அமைதியும் சீர்குலைந்துவிடும். இந்த படத்தை தடை செய்ய வேண்டும்' என்று கூறியிருந்தனர்.


Next Story