குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன


குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன
x

விராலிமலை அம்மன்குளத்தில் கழிவுநீர், நச்சு கழிவுகள் கலப்பதால் மீன்கள் செத்து மிதந்தன.

புதுக்கோட்டை

அம்மன்குளம்

விராலிமலையிலிருந்து கீரனூர் செல்லும் சாலையில் அம்மன்குளம் உள்ளது. இக்குளமானது மாதிரிப்பட்டி, கலிங்கிப்பட்டி, சின்னபழனிபட்டி ஆகிய பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் விராலிமலை அருகே உள்ள தனியார் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் எண்ணெய் கழிவுகளை இங்கு வந்து ஊற்றிவிட்டு சென்று விடுவதாகவும் இதனால் குளத்து நீரானது மாசடைந்து கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

மீன்கள் செத்து மிதந்தன

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் தொடர்ந்து இக்குளத்தில் கழிவு நீர் கலப்பதால் குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதந்தன. இதேபோல் கடந்த 3 மாதத்திற்கு முன்பு மீன்கள் செத்து மிதந்தபோது இந்த குளத்தை அதிகாரிகள் ஆய்வு செய்துவிட்டு சென்றனர். தற்போது மீண்டும் இவ்வாறு மீன்கள் செத்து மிதப்பதால் செய்வதறியாது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.

கோரிக்கை

எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் இக்குளத்தை நேரில் ஆய்வு செய்து கழிவு நீர் மற்றும் நச்சு கழிவுகளை கொட்டி குளத்து நீரை மாசடைய செய்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.


Next Story