மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விசைப்படகு மீனவர்கள்


மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விசைப்படகு மீனவர்கள்
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு அனுமதிக்கக்கோரி சின்னமுட்டத்தில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை விசைப்படகு மீனவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு அனுமதிக்கக்கோரி சின்னமுட்டத்தில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை விசைப்படகு மீனவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மறுப்பு

கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இங்கு தொழிலில் ஈடுபட்டு வரும் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிப்பதற்கும், சாவாளை மீன் பிடிப்பதற்கும் மீன் வளத்துறை தடை விதித்துள்ளது.

இந்தநிலையில் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள கன்னியாகுமரி மீன்வளத்துறை உதவி இயக்குனர் விர்ஜின் கிராசிடம் கோரிக்கை விடுத்தனர். அதற்கு மீன் வளத்துறை உதவி இயக்குனர் அனுமதி அளிக்கவில்லை.

முற்றுகை போராட்டம்

இதையடுத்து சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சின்னமுட்டம் விசைப்படகு உரிமையாளர்கள் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து விசைப்படகு மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னபாலா, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர், போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைதொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story