படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர் மயங்கி விழுந்து சாவு


படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர் மயங்கி விழுந்து சாவு
x

தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் இருந்து படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர் மயங்கி விழுந்து சாவு

கன்னியாகுமரி

கொல்லங்கோடு,

இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த பெபியான்ஸ் (வயது 52), மீனவர். இவரும் அதே பகுதியை சேர்ந்த சபிரீஸ்கான், ரூபின், லூஜின் ஆகியோரும் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். படகு கரையில் இருந்து கடலுக்குள் சிறிது தூரம் சென்றபோது பெபியான்ஸ் திடீரென மயங்கி விழுந்தார். உடனே சக மீனவர்கள் அவருடன் கரை திரும்பினர். பின்னர், பெபியான்சை நித்திரவிளை பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நேரத்தில் மயங்கி விழுந்து மீனவர் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story