மீனவருக்கு கத்திக்குத்து
தூத்துக்குடியில் மீனவருக்கு கத்திக்குத்து விழுந்தது.இது தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைதுசெய்தனர்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் பகுதியில் மீனவரை கத்தியால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட 3வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
மீனவர்
தூத்துக்குடி தருவைகுளத்தை சேர்ந்தவர் லூகாஸ் மணி (வயது 40). மீனவர். இவருக்கும், தாளமுத்துநகர் ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த பாஸ்கர் மகன் ஜோகிங்ஸ்டன் (25), மதன்குமார் என்ற அப்புலூ (25) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று லூகாஸ் மணி தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் பகுதியில் நின்று கொண்டு இருந்தார்.
கத்திக்குத்து
அப்போது அங்கு வந்த ஜோகிங்ஸ்டன், மதன்குமார், தாளமுத்துநகர் ஆரோக்கியபுரத்தை சேர்ந்த அந்தோணிராஜ் (23) ஆகியோர் சேர்ந்த லூகாஸ்மணியிடம் தகராறு செய்து, கம்பு மற்றும் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து லூகாஸ் மணி அளித்த புகாரின் பேரில் தென்பாகம் பேலீசார் வழக்கு பதிவு செய்து ஜோகிங்ஸ்டன், மதன்குமார், அந்தோணிராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜோகிங்ஸ்டன் மீது ஏற்கனவே 3 வழக்குகளும், மதன்குமார் மீது 3 வழக்குகளும், அந்தோணிராஜ் மீது 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.