மீனவர் உடல் கரை ஒதுங்கியது


மீனவர் உடல் கரை ஒதுங்கியது
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே, கடலில் படகு கவிழ்ந்து மாயமான மீனவர் உடல் கரை ஒதுங்கியது.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே, கடலில் படகு கவிழ்ந்து மாயமான மீனவர் உடல் கரை ஒதுங்கியது.

படகு கவிழ்ந்தது

கொள்ளிடம் அருகே கொட்டாயமேடு கிராமத்தை சேர்ந்த நடராஜன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே ஊரைச் சேர்ந்த பெருமாள் (வயது44), சூரியமூர்த்தி ஆகிய 3 மீனவர்களும், கடந்த 27-ந்்தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இவர்கள் கரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது எழுந்த ராட்சத அலையில் படகு கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த 3 பேரும் கடலில் விழுந்தனர். இதில் மீனவர் பெருமாள் கடலில் மூழ்கி மாயானார். மற்ற 2 பேரும் நீந்தி கரை சேர்ந்தனர்.

மீனவர் உடல் கரை ஒதுங்கியது

இதை தொடர்ந்து கடலில் மூழ்கி மாயமான பெருமாளை கடலோர காவல் படை போலீசார் மற்றும் மீனவர்கள் தேடி வந்தனர்.இந்த நிலையில் பெருமாளின் உடல் நேற்று முன்தினம் இரவு 11.50 மணியளவில் கொட்டாய்மேடு கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியது.

இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பெருமாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story