வலையின் கயிறு அறுந்ததில் மீனவரின் விரல் துண்டானது


வலையின் கயிறு அறுந்ததில் மீனவரின் விரல் துண்டானது
x
தினத்தந்தி 5 Aug 2023 12:15 AM IST (Updated: 5 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலில் மீன் பிடிக்கும் போது வலையின் கயிறு அறுந்ததில் மீனவரின் விரல் துண்டானது

நாகப்பட்டினம்


நாகை கீச்சாங்குப்பத்தை சேர்ந்த சித்திரவேல் என்பவரது மகன் சண்முகம். மீனவர். இவர் கடந்த 29-ந்தேதி சக மீனவர்களுடன் நாகையிலிருந்து விசைப்படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். சம்பவத்தன்று நடுக்கடலில் வலையில் சிக்கிய மீன்களை இழுக்கும்போது, வலையின் கயிறு அறுந்ததில் சண்முகத்தின் வலது கை சுண்டுவிரல் துண்டானது. இதில் ரத்த வெள்ளத்தில் சண்முகம் படகிலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அவசர, அவசரமாக விசைப்படகை திருப்பி கரைக்கு வந்த சக மீனவர்கள், சண்முகத்தை நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து தொழில் செய்ய முடியாத ஏழ்மை நிலையில் வாழும் சண்முகத்துக்கு, அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று சக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story