ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பினர்
புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு குளச்சலில் இருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் விசைப்படகுகள் கரை திரும்பினர்.
குளச்சல்,
புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு குளச்சலில் இருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் விசைப்படகுகள் கரை திரும்பினர்.
வெளியூர் ெசல்லும் மீனவர்கள்
குமரி மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கேரளா, குஜராத் மற்றும் கர்நாடகம் ஆகிய கடல் பகுதிகளில் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் ஊர் திருவிழா, இல்லத்திருமணம் மற்றும் பண்டிகை காலங்களில் மட்டும் ஊர் திரும்புவது வழக்கம்.
அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. வருகிற 9-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதைெயாட்டி குளச்சலில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்த விசைப்படகு மீனவர்களும், கேரளா மற்றும் வெளியூருக்கு சென்றிருந்த மீன்பிடி தொழிலாளர்களும் ெசாந்த ஊருக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.
குறிப்பாக கேரளா, கர்நாடகா போன்ற அண்டைய மாநிலங்களுக்கு சென்றிருந்த தொழிலாளர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பே ஊர் திரும்பினர்.
மீன்கள் ஏலம்
இதுபோல் குளச்சலில் இருந்து ஆழ்கடல் பகுதிக்கு சென்ற விசைப்படகுகள் நேற்று முதல் கரை திரும்பிய வண்ணம் உள்ளன. கரை திரும்பிய விசைப்படகுகள் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன. இந்த படகுகளில் கிளிமீன்கள், சூரை, கேரை, புல்லன், கணவாய், மற்றும் இறால் மீன்கள் கிடைத்திருந்தன. இவற்றை மீனவர்கள் ஏலக்கூடத்தில் இறக்கி ஏலமிட்டு விற்பனை செய்தனர்.