சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் வினாடிக்கு 1,540 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சாத்தனூர் அணை
சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் வினாடிக்கு 1,540 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சாத்தனூர் அணை
தண்டராம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டதாகும். இதில் 737 மில்லியன் கனஅடி நீர் தேக்கி வைக்க முடியும்.
கடந்த வாரங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது சாத்தனூர் பகுதியில் மழை முற்றிலும் இல்லாததால் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
1,540 கனஅடி நீர் வெளியேற்றம்
இதனால் வினாடிக்கு 1,412 கனஅடி நீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. எனவே அணையில் 116.30 அடி அளவிற்கு நீரை தேக்கி வைத்துக்கொண்டு வினாடிக்கு 1,540 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதில் 450 கன அடி நீர் பாசன கால்வாய் வழியாக வெளியேற்றப்படுகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது.