மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,000 கனஅடிக்கு கீழ் குறைந்தது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,000 கனஅடிக்கு கீழ் குறைந்தது
சேலம்
மேட்டூர்:
மேட்டூர் அணைக்கு கடந்த சில வாரங்களாக வினாடிக்கு 1,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டு வந்தது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு அணைக்கு வினாடிக்கு 1,600 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 1,004 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 1,000 கனஅடிக்கு கீழ் குறைந்து, வினாடிக்கு 992 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 103.81 அடியாக இருந்தது.
Next Story