தொடர்ந்து 3-வது நாளாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,400 கனஅடியாக நீடிப்பு


தொடர்ந்து 3-வது நாளாக  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,400 கனஅடியாக நீடிப்பு
x

தொடர்ந்து 3-வது நாளாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,400 கனஅடியாக நீடிக்கிறது.

சேலம்

மேட்டூர்,

மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரத்து 400 கனஅடியாக குறைந்தது. இந்த நீர்வரத்து தொடர்ந்து 3-வது நாளாக நேற்று வரை வினாடிக்கு 10 ஆயிரத்து 400 கனஅடி வீதம் நீடித்து வருகிறது.

அணை நிரம்பியுள்ள நிலையில், அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கனஅடி வீதமும், காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.


Next Story