காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவு: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 55 ஆயிரம் கனஅடியாக குறைந்தது


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவு:  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 55 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
x

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 55 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

சேலம்

மேட்டூர்

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. அதாவது நேற்று முன்தினம் வினாடிக்கு ஒரு லட்சத்து 85 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் காவிரி கரையோர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் புகுந்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறினர்.

இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. 2 நாட்களுக்கு பிறகு நேற்று அனல்மின் நிலையத்தில் சாம்பல் லோடு ஏற்றி செல்லும் லாரிகள், எடப்பாடி சாலையை பயன்படுத்தாமல், அனல்மின் நிலைய பிரதான சாலையை பயன்படுத்தி சாம்பல் ஏற்றும் பணியை மேற்கொண்டன. ஆற்றின் வெள்ளம் குறைந்ததால், தற்போது காவிரி ஆற்றின் கரையோரங்களில் வெள்ளம் வடிய தொடங்கி உள்ளது.


Next Story