சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்ட்த்தில் ஈடுபட்டனர்
பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் செல்வி தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் நாகரெத்தினம், செல்வலெட்சுமி, செந்தமிழ்செல்வி, சிங்காரவேலு, தமிழரசி மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் லதா வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில், சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3000 வழங்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும். பணிக்கொடையாக சத்துணவு அமைப்பாளருக்கு ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளருக்கு ரூ.3 லட்சமும் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். முடிவில் மாவட்ட பொருளாளர் வேம்பு நன்றி கூறினார்.