தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது


தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது
x

திருப்பத்தூர்பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகிந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகிந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

தரைப்பாலம் மூழ்கியது

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. திருப்பத்தூரில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலைகளில் தண்ணீர் தேங்கியது. நகராட்சி 36- வது வார்டு குள்ளச்சாரி வட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. திருப்பத்தூர் அருகே உள்ள கொரட்டியில் இருந்து தண்டுக்கானுர் செல்லும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு கிராமங்களுக்கும், திருப்பத்தூருக்கும் வர முடியாமல் அவதிப்பட்டனர்.

மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. அதன்படி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 49 ஏரிகளில் தற்போது வரை 39 ஏரிகள் நிரம்பியுள்ளது. இதில் குனிச்சி ஏரி கடந்த 49 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது நிரம்பி வழிந்தது.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

இந்த ஏரி நிரம்பி தண்ணீர் வழிவதால் ஏரி அருகே உள்ள செல்வனூர் குடியிருப்பு பகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதில் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் நனைந்தது சேதமானது. வீடு மற்றும் தெருக்களில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதேபோல் சுமார் 45 ஆண்டுகளுக்கு பின்னர் அச்சமங்கலம், மேல்அச்சமங்கலம், அடித்தூர் உள்ளிட்ட ஏரிகளும் நிரம்பியதால் அப்பகுதி மக்கள் ஆடுவெட்டி பூஜை செய்து வழிபட்டனர். அதேபோல் ஆண்டியப்பனூர் அணையும் நிரம்பி உள்ளது.

திருப்பத்தூரில் நேற்று முன்தினம் பேய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

ஆம்பூர்- 27.1, ஆம்பூர் சர்க்கரை ஆலை- 42.60, ஆலங்காயம்- 96.60

வாணியம்பாடி 60, நாட்டறம்பள்ளி- 96.20, நாட்டறம்பள்ளி சக்கரை ஆலை- 68, திருப்பத்தூர்- 78.20.


Next Story