வனப்பகுதியில் தீ கட்டுக்குள் வந்தது
வத்திராயிருப்பு வனப்பகுதியில் தீ கட்டுக்குள் வந்தது.
விருதுநகர்
வத்திராயிருப்பு,
ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் வத்திராயிருப்பு வனச்சரகத்திற்குட்பட்ட தொப்பிமலை பீட் பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் காட்டுத்தீ பரவியது. இதையெடுத்து வத்திராயிருப்பு ரேஞ்சர் (பொறுப்பு) செல்லமணி தலைமையில் 15-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டுத்தீ மேலும் பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பின் நேற்று மாலை காட்டுத்தீ கட்டுக்குள் வந்தது. இந்த தீவிபத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் அழிந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story