வன உயிரியல் பூங்கா விரைவில் அமைக்கப்படும்-வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் பேட்டி


வன உயிரியல் பூங்கா விரைவில் அமைக்கப்படும்-வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் பேட்டி
x
தினத்தந்தி 27 Jun 2023 12:58 AM IST (Updated: 27 Jun 2023 3:10 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் ரூ.42¼ கோடியில் வன உயிரியல் பூங்கா விரைவில் அமைக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் கூறினார்.

திருச்சி

திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் ரூ.42¼ கோடியில் வன உயிரியல் பூங்கா விரைவில் அமைக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் கூறினார்.

வனத்துறை அமைச்சர் ஆய்வு

திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் வன உயிரியல் பூங்கா அமைய உள்ள காப்புக்காடு பகுதியில் தமிழக வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து திருச்சி வன பொறியியல் கோட்டத்தின் சார்பில் ரூ.7 கோடியே 41 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலையை பார்வையிட்டார்.

இந்தநிலையில் நேற்று துறையூர் வனச்சரகத்தில் உள்ள மங்களம் அருவிக்கு பொதுமக்கள் வருகையை அதிகப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்களுடன் அமைச்சர் கலந்தாலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆய்வு குறித்து அமைச்சர் மா.மதிவேந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வன உயிரியல் பூங்கா

2009-ம் ஆண்டு கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது திருச்சியில் வன உயிரியல் பூங்கா அமைக்க முதற்கட்ட பணிகள் நடைபெற்றன. இடையில் ஆட்சி மாற்றத்தால் இந்த பணிகள் முடங்கின. தற்போது மீண்டும் தி.மு.க. ஆட்சியில் வன உயிரியல் பூங்கா அமைப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த பூங்காவில் வேறு என்னென்ன பறவைகள், மிருகங்கள் கொண்டுவர வாய்ப்பு உள்ளது என்றும், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்துள்ளோம். மத்திய அரசின் அனுமதி விரைவில் கிடைத்த உடன் இதற்கான பணிகள் வேகமாக மேற்கொள்ளப்படும். சுமார் ரூ.42¼ கோடி மதிப்பீட்டில் அமைய உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, வனத்துறை அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story