நான்குவழி சாலைப்பணிகளை ஒரு ஆண்டுக்குள் முடிக்க வேண்டும்


நான்குவழி சாலைப்பணிகளை ஒரு ஆண்டுக்குள் முடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 3 May 2023 12:15 AM IST (Updated: 3 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் நடைபெறும் நான்கு வழிச்சாலை பணிகளை ஒரு ஆண்டுக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம், அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் நடைபெறும் நான்கு வழிச்சாலை பணிகளை ஒரு ஆண்டுக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம், அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தினார்.

தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது முகாம் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

திருத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு

குமரியில் ரூ.2,433.25 கோடி மதிப்பில் 53.6 கி.மீ. தூரம் 4 வழிச்சாலை உருவாக்கும் திட்டத்தில் ஏற்கனவே நிலம் கையகப்படுத்தப்பட்டு, கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு 30.2 கி.மீ தூரம் சாலை பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள 23.4 கி.மீ. தூரத்தில் சில பகுதிகளில் பணிகள் தொடங்காமலும், சில பகுதிகளில் பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையிலும் காணப்படுகிறது. இந்த 23.4 கி.மீ. தூர பகுதிகளில் சாலை உருவாக்க 25 லட்சம் மெட்ரிக் டன் மண் தேவைப்படுவதாக கணக்கீடு செய்யப்பட்டு நமது மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்படாததால் பணியை தொடர இயலாத நிலை உருவானது. அதன் பின்னர் அண்டை மாவட்டங்களில் இருந்து மண் எடுப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு மாவட்ட நிர்வாகங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அதற்கேற்ப திட்ட நிதியை மறுவரையறை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திருத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் ரூ.1141.78 கோடி மதிப்பில், கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதியன்று மறுஒப்பந்தம் அளிக்கப்பட்டு மீண்டும் பணிகள்தொடங்கும் நிலையை எட்டியுள்ளது.

நீராதாரங்கள் சேதம் இன்றி...

இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனருடன் நடைபெற்ற சந்திப்பின்போது புதிதாக உருவாக்கப்படும் இந்த சாலையில் காணப்படும் 54 நீராதாரங்களை எவ்வித சேதமுமின்றி பாதுகாக்கும் வகையில், முறையாகப் பாலம் அமைப்பதை உறுதி செய்ய வேண்டும். விரைந்து பணிகளை தொடங்கி ஒரு வருடத்திற்குள் திட்டத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

கூட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் வேல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story