நடுவீரப்பட்டு அருகேகள்ளக்காதல் விவகாரத்தில் விவசாயியை கொன்ற நண்பர் கைது


நடுவீரப்பட்டு அருகேகள்ளக்காதல் விவகாரத்தில் விவசாயியை கொன்ற நண்பர் கைது
x

நடுவீரப்பட்டு அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் விவசாயியை கொன்ற நண்பர் கைது செய்யப்பட்டார்.

கடலூர்

நடுவீரப்பட்டு,

வாழைத்தோப்பில் புதைப்பு

கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு அருகே உள்ள சத்திரம் எஸ்.புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 47). விவசாயி. இவருடைய நண்பர் மோகன். இவர் ராஜசேகர் வீட்டுக்கு சென்று வந்தபோது, ராஜசேகர் மனைவி விஜயலட்சுமி (38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. இதை கண்டித்த ராஜசேகரை விஜயலட்சுமி, மோகன் ஆகிய 2 பேரும் சேர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் அடித்து கொலை செய்து வீட்டின் பின்புற வாழைத்தோப்பில் புதைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயலட்சுமியை கைது செய்தனர். கள்ளக்காதலன் மோகன் தலைமறைவாகி விட்டார்.

9 மாதங்களுக்கு பிறகு நண்பர் கைது

இந்த நிலையில் விவசாயி கொலை வழக்கில் தேடப்பட்ட மோகன் நெய்வேலி பகுதியில் பதுங்கி இருப்பதாக நடுவீரப்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், தலைமை காவலர் அந்தோணி, போலீஸ்காரர் ராஜி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் நெய்வேலிக்கு விரைந்து சென்று, மோகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நடுவீரப்பட்டு அருகே கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் நண்பரை 9 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story