அரசு பஸ்சில் கண்டக்டரை காரில் கடத்திய கும்பல்


அரசு பஸ்சில் கண்டக்டரை காரில் கடத்திய கும்பல்
x

வேலூரில் இருந்து அமிர்திக்கு சென்ற பஸ்சில் போதையில் ரகளை செய்த கண்டக்டரை 4 பேர் கும்பல் காரில் கடத்திச்சென்ற சமங்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் கண்டக்டரை மீட்டு 4 பேரை கைது செய்தனர்.

திருவண்ணாமலை

வேலூரில் இருந்து அமிர்திக்கு சென்ற பஸ்சில் போதையில் ரகளை செய்த கண்டக்டரை 4 பேர் கும்பல் காரில் கடத்திச்சென்ற சமங்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் கண்டக்டரை மீட்டு 4 பேரை கைது செய்தனர்.

அரசு பஸ்

வேலூரில் உள்ள கென்னடிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாரதிராஜா (வயது 42). இவர் வேலூரில் இருந்து அமிர்தி செல்லும் அரசு பஸ்ஸில் கண்டக்டராக உள்ளார்.நேற்று முன்தினம் இரவு வேலூரில் இருந்து அமைதி செல்லும் பஸ்சில் அவர் கண்டக்டராக சென்று கொண்டிருந்தார்.

அந்த பஸ்சில் சாத்துமதுரை கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் அரவிந்த் (24), குமார் என்பவரின் மகன் வேலுமணி (41), வேலூர் கொசப்பேட்டை பகுதியை சேர்ந்த சந்திரசேகர் மகன் சத்தியமூர்த்தி (35), வேலப்பாடி பகுதியில் இருந்த ராஜா என்பவரின் மகன் ஹரி கிருஷ்ணன் (30) ஆகிய நான்கு பேரும் மது போதையில் ஏறி உள்ளனர்.

பஸ் சிறிது தூரம் செல்வதற்குள் அவர்கள் அதில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் பாதி வழியில் கண்டக்டர் பாரதிராஜா கீழே இறக்கிவிட்டுள்ளார்.

காரில் விரட்டினர்

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கார் ஒன்றை எடுத்துக்கொண்டு அமிர்தி சென்ற பஸ்ஸை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். அதற்குள் பஸ் அமிர்தியை சென்றடைந்து விட்டது.

அங்கு சென்ற 4 பேரும் கண்டக்டர் பாரதிராஜாவை காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜமுனாமரத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதனையடுத்து கடத்தல் கும்பலை பிடித்து கண்டக்டர் பாரதிராஜாவை மீட்க பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கணியம்பாடி அருகே வேடகொள்ளைமேடு பஸ் நிறுத்தம் அருகே வந்த காரை போலீசார் சோதனை செய்தனர். அதில் இருந்த பாரதிராஜாவை 4 பேரும் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து கண்டக்டர் பாரதிராஜாவை மீட்டனர்.

பின்னர் அரவிந்த், வேலுமணி, சத்தியமூர்த்தி, ஹரிகிருஷ்ணன் ஆகிய 4 பேரையும் ஜமுனாமரத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர விசாரணை நடத்தி 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story