ஏரியில் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடித்த கும்பல்


ஏரியில் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடித்த கும்பல்
x

தியாகதுருகம் அருகே ஏரியில் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடித்த கும்பலை அதிகாரி எச்சரித்தார்.

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்:

தியாகதுருகம் அருகே பானையங்கால் கிராமத்தில் இருந்து சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் மணிமுக்தா ஏரி உள்ளது. இந்த ஏரியில் ஒரு கும்பல், கொக்கி போட்டு மின்சாரத்தை பாய்ச்சி மீன்பிடித்து வந்தது. இது பற்றி அறிந்ததும், விழுப்புரம் மீன்வள மேற்பார்வையாளர் சுதாகர் நேற்று மணிமுக்தா ஏரியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் ஏரியில் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடித்தால் உயிர் சேதம் ஏற்படும். எனவே அவ்வாறு மீன் பிடிக்கக் கூடாது. மீறி மின்சாரம் பாய்ச்சி மீன் பிடிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மின்சாரத் துறைக்கு சொந்தமான மின் ஒயர்களில் திருட்டுத்தனமாக மின் இணைப்பு ஏற்படுத்தி மீன் பிடிக்கும் நபர்கள் மீது மின்சாரத் துறையினர் கடுமையாக நடவடிக்கை எடுப்பார்கள் என்றார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் ராஜதுரை, பானையங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story