நாட்டுவெடிகுண்டு வீசிய வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


நாட்டுவெடிகுண்டு வீசிய வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

நாட்டுவெடிகுண்டு வீசிய வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சி

சமயபுரம், ஜூலை.31-

திருச்சி புத்தூர் நால்ரோட்டை சேர்ந்தவர் திலீப் (வயது 34). இவர் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க திருச்சி மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இவர், கடந்த ஜூலை மாதம் 13-ந்தேதி இரவு திருச்சியில் இருந்து லால்குடிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் அடுத்துள்ள அகிலாண்டபுரம் என்ற இடம் அருகே சென்ற போது, 5 பேர் கொண்ட கும்பல் கார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.இதில் கார் கண்ணாடி உடைந்தது. திலீப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அகிலாண்டபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோபால் என்கிற கோபாலகிருஷ்ணன் (28), சுரேஷ் என்கிற தாயுமானவன் (21), செந்தில்குமார் (42), ஸ்ரீரங்கம் கீழவாசல் ரெட்டியார் தெருவைச் சேர்ந்த நந்தகுமார் (25), வினோத் என்கிற ஹரிஹரன் (25) ஆகிய 5 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ் குமார் உத்தரவின்படி, டி.ஐ.ஜி. சரவண சுந்தர் அறிவுரையின் பேரில் திருச்சி போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் கோபால் என்கிற கோபாலகிருஷ்ணனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருச்சி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து, அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் பிரதீப்குமார் நேற்று உத்தரவிட்டார். இதை தொடர்ந்து இதற்கான உத்தரவு நகல் சிறையில் இருக்கும் கோபாலகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது.


Next Story