லாரியில் ஏற்றி வந்த ஜெனரேட்டர்கள் சாலையில் விழுந்து போக்குவரத்துபாதிப்பு
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே லாரியில் ஏற்றி வந்த ஜெனரேட்டர்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வேலூர்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து அதிநவீன ஜெனரேட்டர்களை (ெஜன்செட்) ஏற்றிக்கொண்டு கனரக லாரி ஒன்று சென்னை துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காலை 7 மணியளவில் வந்தபோது லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. உடனடியாக லாரியை பிரேக் பிடித்து டிரைவர் நிறுத்தினார். இதில் லாரியின் பின்பகுதியில் இருந்த 2 ஜெனரேட்டர்கள் சரிந்து சாலையில் விழுந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் அங்கு சென்று போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தினர். பின்னர் கிரேன் மற்றும் பொக்லைனை வரவழைத்து ஜெனரேட்டர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story