சோழவந்தான் அருகே களை கட்டிய கிடாய்முட்டு சண்டை-திரளானோர் பார்த்து ரசித்தனர்
சோழவந்தான் அருகே களை கட்டிய கிடாய்முட்டு சண்டையில் திரளானோர் பார்த்து ரசித்தனர்
சோழவந்தான்
சோழவந்தான் அருகே கிடாய்முட்டு சண்டை போட்டி நடந்தது.
கிடாய்முட்டு சண்டை
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழாவில் கிடாய்முட்டு சண்டை நடந்து வந்தது. அரசு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் நேற்று காலை கிடாய் முட்டு சண்டை நடந்தது. பல்வேறு கிராமங்களில் இருந்து கிடாய்கள் வந்து குவிந்தன.இந்நிகழ்ச்சிக்கு கமிட்டித்தலைவர் வீரசிங்கம் தலைமை தாங்கினார். முத்துப்பாண்டி முன்னிலை வகித்தார். உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச்செயலாளர் கதிரவன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
85 கிடாய்கள் பங்கேற்பு
இந்த கிடாய்முட்டு சண்டையில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து 85 கிடாய்கள் போட்டியில் கலந்து கொண்டன.கலந்துகொண்ட கிடாய் களுக்கு கமிட்டி சார்பாக பரிசு வழங்கப்பட்டது. துணை சூப்பிரண்டு நல்லு தலைமையில் 60 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று காலை முதல் மாலை வரை கிடாய்முட்டு சண்டை நடந்தது. களை கட்டிய கிடாய்முட்டு சண்ைடயை ஏராளமான பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.