கிணற்றில் தவறி விழுந்த சிறுமி சாவு
கிணற்றில் தவறி விழுந்த சிறுமி இறந்தார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மச்சுவாடியை சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 39). இவரது மகள் பவித்ரா (5). இவர் அடப்பன்காரசத்திரத்தில் தனது பாட்டியின் வீட்டில் கடந்த சில நாட்களாக தங்கியிருந்தார். இந்த நிலையில் வெளியில் விளையாடிக்கொண்டிருந்த போது அருகில் உள்ள 40 அடி ஆழ கிணற்றில் பவித்ரா தவறி விழுந்தார். இந்த நிலையில் பவித்ராவை காணாதது கண்டு அவரது வீட்டில் இருந்தவர்கள் தேடிப்பார்த்தனர். இதில் அவர் கிணற்றில் விழுந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்கள் கிணற்றில் இறங்கி சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பவித்ரா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருக்கோகா்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story