தீயில் கருகி சிறுமி சாவு
ஆரணி அருகே தீயில் கருகி சிறுமி பரிதாபமாக இறந்தார்.
ஆரணி
ஆரணியை அடுத்த குன்னத்தூர் மதுரா அகஸ்தியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35), செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகிறார்.
இவருக்கு வைஷ்ணவி (7) என்ற மகளும், 3 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். நேற்று பகலில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டதால் வைஷ்ணவியும் 3 வயது குழந்தையும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது விளையாட்டாக சமையல் அறையில் இருந்த தீக்குச்சியை எடுத்து உரசிய போது வைஷ்ணவி அணிந்திருந்த ஆடையில் தீப்பொறி பட்டு உடல் முழுவதும் எரியத் தொடங்கியுள்ளது.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் வந்து தீயில் கருகிய வைஷ்ணவியை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சையாக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.