பாகலூரில்பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்த சிறுமிதேடும் பணி தீவிரம்
கிருஷ்ணகிரி
ஓசூர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூரில், ஓசூர்-மாலூர் நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் இருந்து நேற்று இரவு 8 மணி அளவில் 15 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி திடீரென ஆற்றில் குதித்ததாக அந்த வழியாக சென்ற ஒரு நபர் கூச்சலிட்டார். இதையடுத்து பொதுமக்கள் அங்கு குவிந்தனர். மேலும் தகவல் அறிந்து பாகலூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து சென்று சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் 5 அடி ஆழத்திற்கு தண்ணீர் உள்ள நிலையில் சிறுமி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாளா? அல்லது பாறையில் மோதி உள்ளாரா? என்று தெரியவில்லை. மேலும் அந்த பகுதியில் இருள் சூழ்ந்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story