சிறுமியிடம் நகையை பறித்து சென்ற பெண்


சிறுமியிடம் நகையை பறித்து சென்ற பெண்
x

மயிலாடுதுறையில் சிறுமியிடம் நகையை பறித்து சென்ற பெண்ணை போலீசார் விரட்டி பிடித்தனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை திருவிழந்தூர் ராதாநல்லூர் தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 40). இவர் தனது 7 வயது மகள் அபிக்சாவை அழைத்துக்கொண்டு தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றார். பின்னர் மீண்டும் அரசு பஸ்சில் மயிலாடுதுறைக்கு திரும்பி உள்ளார். மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி சாலை பஸ் நிறுத்தத்தில் அபிக்சாவை கையில் பிடித்துக்கொண்டு தினேஷ்குமார் பஸ்சில் இருந்து இறங்கியுள்ளார். அப்போது பெண் ஒருவர் சிறுமி அபிக்சா கழுத்தில் அணிந்து இருந்த அரை பவுன் நகையை பறித்து தப்பி சென்றுள்ளார். இதனை கண்ட தினேஷ்குமார் சத்தம் போட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மயிலாடுதுறை போலீசார் அந்த பெண்ணை விரட்டி சென்று காவிரிக்கரை அருகே சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்த நகையை மீட்டனர்.இதனைத்தொடர்ந்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், மதுரை வண்டியூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மனைவி மஞ்சுளா(45) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து மஞ்சுளாவை செய்தார்.


Next Story