சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்


சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்
x
தினத்தந்தி 1 Feb 2023 12:15 AM IST (Updated: 1 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

கோயம்புத்தூர்

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சிறுமி பாலியல் பலாத்காரம்

பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 17 வயது, 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். அவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆழியாரை சேர்ந்த 22 வயது கட்டிட தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர்.

இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு, சிறுமியை பஸ் நிறுத்தத்திற்கு வருமாறு கூறி அந்த வாலிபர் கடத்தி சென்றார்.

போக்சோவில் வழக்கு

பின்னர் அவர் அங்கலகுறிச்சியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து சிறுமியை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் பாதுகாப்பு கேட்டு ஆழியாறு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் 17 வயதே ஆன சிறுமியை அந்த வாலிபர் திருமணம் செய்தது தெரியவந்தது.

எனவே அவர்கள் 2 பேரையும் போலீசார் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் அந்த வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story