சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தமுன்னாள் ராணுவ வீரருக்கு 5 ஆண்டு ஜெயில்:தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு


தினத்தந்தி 24 Aug 2023 12:15 AM IST (Updated: 24 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் ராணுவ வீரருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

தூத்துக்குடி

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் ராணுவ வீரருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

முன்னாள் ராணுவ வீரர்

கோவில்பட்டி அருகே உள்ள வடக்கு கங்கன்குளத்தை சேர்ந்தவர் ராஜகனி (வயது 70). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜகனியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் கடந்த 21.08.2019 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

5 ஆண்டு ஜெயில்

தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், குற்றம் சாட்டப்பட்ட ராஜகனிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டகோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி, அரசு வக்கீல் முத்துலட்சுமி மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.


Next Story