குழந்தை பெற்றெடுத்த சிறுமி கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு


குழந்தை பெற்றெடுத்த சிறுமி  கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
x

சிறுமி குழந்தை பெற்றெடுத்தது தொடர்பாக கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தேனி

தேவதானப்பட்டி அருகில் உள்ள காமக்காபட்டி அம்சாபுரத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 30). விவசாயி. இந்த ஊரில் உள்ள உறவினர் வீட்டுக்கு மதுரை விளாங்குடியை சேர்ந்த 8-ம் வகுப்பு படித்த 16 வயது சிறுமி கடந்த வருடம் பள்ளி விடுமுறையின்போது வந்து இருந்தார். அப்போது விஸ்வநாதன் அந்த சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து சிறுமி கர்ப்பிணியானார். அதையொட்டி அவர் கடந்த 22-ந்தேதி பிரசவத்திற்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்தநிலையில் சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தேவதானப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விஸ்வநாதன், அவரது தாயார் கோமதி (55), சிறுமியின் தாய், தந்தை என 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story