நெடுஞ்சாலைத்துறை சார்பில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு
நெடுஞ்சாலைத்துறை சார்பில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெடுஞ்சாலைத் துறை சார்பில் தமிழகம் முழுவதும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்தொடர்ச்சியாக வேலூர் காகிதப்பட்டறையில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தனசேகர், உதவி பொறியாளர் பிரகாஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். இளநிலை பொறியாளர் விஜயா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில், வேலூர் மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்கள், சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடப்படும் என்றார். நிகழ்ச்சியில் வேலூர் உதவி கலெக்டர் கவிதா, தாசில்தார் செந்தில், சுகாதார அலுவலர் லூர்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.