ஆடு திருடியவர் சிக்கினார்


ஆடு திருடியவர் சிக்கினார்
x
தினத்தந்தி 10 July 2023 1:15 AM IST (Updated: 10 July 2023 5:29 PM IST)
t-max-icont-min-icon

உப்புக்கோட்டையில் ஆடு திருடியவர் ைகது செய்யப்பட்டார்.

தேனி

உப்புக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 36). இவர் பழனிசெட்டிபட்டியில் கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி வீட்டு முன்பு ஆடுகளை கட்டி வைத்திருந்தார். இரவு ஆடுகளுக்கு தீவனம் போட்டு விட்டு மணிமாறன் தூங்க சென்றார். பின்னர் காலையில் எழுந்து பார்த்த போது செம்மறி ஆடு ஒன்று காணாமல் போய்விட்டது. இதுகுறித்து வீரபாண்டி போலீசில் மணிமாறன் புகார் கொடுத்தார். பின்னர் கிடா காணாமல் போனது குறித்து ெசல்போனில் வாட்ஸ்-அப் மூலம் நண்பர்களுக்கு தகவலை பகிர்ந்து உள்ளார். அதன் பேரில் அவரது ஆடு கம்பம் வடக்குப்பட்டியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் வீரபாண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அங்கு போலீசார் விரைந்து சென்று கிடாவை பறிமுதல் செய்தனர். மேலும் ஆடு திருடிய கம்பம் வடக்குப்பட்டியை சேர்ந்த சூர்யா (23) என்பவரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story