வாய்க்காலில் இறங்கிய அரசு பஸ்
பேரளம் அருகே மரத்தில் மோதி விட்டு வாய்க்காலில் அரசு பஸ் இறங்கியது.
திருவாரூர்
நன்னிலம்:
திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னையை நோக்கி ஒரு அரசு பஸ் நேற்று காலை மயிலாடுதுறை வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது பேரளம் அருகே இஞ்சிகுடி பகுதியில் சென்ற போது மயிலாடுதுறையில் இருந்து திருவாரூரை நோக்கி வந்த அரசு பஸ்சும் ஒன்றோடு, ஒன்று உரசிக்கொண்டது. இதில் சென்னை சென்ற அரசு பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி வாய்க்காலில் இறங்கியது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் மற்றும் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினா். இந்த விபத்தினால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story