தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
சிவகிரியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
சிவகிரி:
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து சிவகிரி தாலுகா அலுவலகம் முன்பு தென்காசி மாவட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கத்தின் தென்காசி மாவட்ட இணைச்செயலாளர் மாடசாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார்.
1.1.2023 முதல் வழங்க வேண்டிய 3 சதவீத அக விலைப்படி, சரண்டர் உள்ளிட்டவற்றை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் வட்டக்கிளை தலைவரும், சிவகிரி வருவாய் ஆய்வாளருமான சரவணகுமார், கூடலூர் வருவாய் ஆய்வாளர் கோபால கிருஷ்ணன், வாசுதேவநல்லூர் வருவாய் ஆய்வாளர் வள்ளி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் வீரசேகர், உதவி வேளாண்மை அலுவலர்கள் சாகுல் ஹமீது, அரவிந்த், நயினார், பார்வதி, மகாலட்சுமி, கணேஷ் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.