அரசு பள்ளியில் வகுப்பறைகள் இல்லாததால் மரத்தடியில் அமர்ந்து பாடம் படிக்கும் மாணவர்கள்


அரசு பள்ளியில் வகுப்பறைகள் இல்லாததால் மரத்தடியில் அமர்ந்து பாடம் படிக்கும் மாணவர்கள்
x
தினத்தந்தி 12 Dec 2022 12:15 AM IST (Updated: 12 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே புங்கனூர் ஊராட்சியில் அரசு பள்ளியில் வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து பாடம் படித்து வருகின்றனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி அருகே புங்கனூர் ஊராட்சியில் அரசு பள்ளியில் வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து பாடம் படித்து வருகின்றனர்.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புங்கனூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 130 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.இந்த பள்ளியில் புங்கனூர், காடாக்குடி, கீழவரவுகுடி, மல்லுக்குடி, ரெட்டிகோடங்குடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் ஏராளமாேனார் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 6 வகுப்பறை கட்டிடங்கள் இருந்தன..

வகுப்பறைகள் சேதம்

இந்த நிலையில் 5 வகுப்பறை கட்டிடங்கள் சேதமடைந்தது. இதனால் இந்த கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்படடது.மேலும் ஒரு கட்டிடமும் ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது.வகுப்பறைகள் இல்லாததால் தினமும் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர். இதன் காரணமாக ஆசிரியர்கள், மாணவர்கள் தினமும் வெயில் மற்றும் மழையால் பாதிக்கப்படுகின்றனர்.

மரத்தடியில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்

தொடர்ந்து மழை பெய்தால் மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் போதிய அடிப்படை வசதிகளுடன் கூடிய வகுப்பறையில் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், புங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை, எளிய மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.இங்கு போதிய வகுப்பறை இல்லாததால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர். தரையில் அமர்ந்து படிப்பதால் வெயில், மழை காலங்களில் மாணவர்களுக்கு அடிக்கடி உடல் நல குறைவு ஏற்படுகிறது.

புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்

மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் போது பள்ளி வளாகத்திற்குள் ஆடுகள் உள்ளே புகுந்து படுத்து கொள்கின்றன.எனவே சம்பந்தப்பட்ட துறையினர் புங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போதிய அடிப்படை வசதியுடன் கூடிய புதிய வகுப்பறை கட்டிடத்தை கட்டித்தர வேண்டும் இல்லையென்றால் பெற்றோர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.


Next Story