நலவாரியங்களின் கூட்டு குறைதீர்க்கும் கூட்டத்தை அரசு நடத்த வேண்டும்


நலவாரியங்களின் கூட்டு குறைதீர்க்கும் கூட்டத்தை அரசு நடத்த வேண்டும்
x

கலெக்டர் தலைமையில் நல வாரியங்களின் கூட்டு குறைதீர்க்கும் கூட்டத்தை அரசு நடத்த வேண்டும் என அமைப்புச்சாரா தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

திருவாரூர்

கலெக்டர் தலைமையில் நல வாரியங்களின் கூட்டு குறைதீர்க்கும் கூட்டத்தை அரசு நடத்த வேண்டும் என அமைப்புச்சாரா தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

பேரவை கூட்டம்

திருவாரூரில் அமைப்புச்சாரா தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் காந்தி முன்னிலை வகித்தார்.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வை.செல்வராஜ், ஏ.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் குணசேகரன், கட்சியின் ஒன்றிய செயலாளர் நாகராஜ், சுமைப்பணி தொழிலாளர் சங்க செயலாளர் புலிகேசி, சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்வம், சங்க பொருளாளர் முகமது இசாக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் நல வாரியங்களின் கூட்டு குறைதீர்க்கும் கூட்டத்தை அரசு நடத்த வேண்டும். நலவாரியத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து, அனைத்து பயன்களும் உடனுக்கு உடன் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் உள்ளுர் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க மறுத்து, குறைந்த கூலி மட்டும் கொடுத்து வெளிமாநில தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தி வருவதால் அமைப்புச்சார தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அரசு தலையிட்டு வேலைகளில் உள்ளுர் தொழிலாளர்களுக்கு முதன்மை அளித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story