கல்லறை தோட்டத்திற்கு அரசு இடம் வழங்க வேண்டும்


கல்லறை தோட்டத்திற்கு அரசு இடம் வழங்க வேண்டும்
x

கல்லறை தோட்டத்திற்கு அரசு இடம் வழங்க வேண்டும் என உதவி கலெக்டரிடம், அனைத்து கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்ட அனைத்திந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பினர் சங்க கவுரவ தலைவர் பாஸ்டர். தங்கதுரை தலைமையில்,. மாவட்ட தலைவர் ஜேக்கப் செல்வம், செயலாளர் கெட்வின் வில்லியம், நிர்வாகி பார்த்திபராஜ் ஆகியோர் சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனாவிடம் ஒரு மனு வழங்கினர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- போதகர் மீது பொய் வழக்கு போடக்கூடாது, கல்லறை தோட்டத்திற்கு அரசு இடம் வழங்க வேண்டும். பட்டா இல்லாத சபைகளுக்கு அரசு உடனடியாக பட்டா வழங்க வேண்டும். அனைத்து திருச்சபைகளுக்கும் கட்டிட கட்டுமான பணி சான்று வழங்க வேண்டும், சபையில் ஆராதனை நடத்த என்ஓசி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக மயிலாடுதுறை சாலையில் இருந்து அனைத்து கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பினர் ஊர்வலமாக வந்து உதவி கலெக்டர் அலுவலகத்தை அடைந்தனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.


Related Tags :
Next Story