விளாப்பாக்கம் பேரூராட்சியில் அரசு புறம்போக்கு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்


விளாப்பாக்கம் பேரூராட்சியில் அரசு புறம்போக்கு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
x

விளாப்பாக்கம் பேரூராட்சியில் அரசு புறம்போக்கு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள தெருக்கள், அரசு புறம்போக்கு இடங்கள், கிராம நலனுக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள், குளங்கள், குட்டைகள், நீர் ஓடைகள் மற்றும் நீர்நிலைகள் போன்ற பல அரசு பொது இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதை இதுவரை எந்த அரசு அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருந்து வருக்கின்றனர். ஆக்கிரமிப்புக்களை அகற்றிக்கோரி பல முறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story