அரசு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும்
அரசு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும்
மன்னார்குடி:
மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 23-வது நகர மாநாடு நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் ரத்தினகுமார், மாதர் சங்க நிர்வாகி மல்லிகா ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில செயலாளர் காமராசு, இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் வீரமணி, இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் துரை.அருள்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டு கொடியை இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் வை.சிவபுண்ணியம் ஏற்றி வைத்தார். தியாகிகள் நினைவு ஸ்தூபியை மாலாபாண்டியன் திறந்துவைத்தார். மாநாட்டை மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். மாநாட்டில் மன்னார்குடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட வேண்டும். தொழில்நுட்ப கல்லூரி மற்றும் அரசு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.