அரசாங்கத்தின் தவறை கவர்னர் தட்டிக் கேட்பவராக இருக்கிறார்


அரசாங்கத்தின் தவறை கவர்னர் தட்டிக் கேட்பவராக இருக்கிறார்
x

அரசாங்கத்தின் தவறை கவர்னர் தட்டிக் கேட்பவராக இருக்கிறார் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

அரசாங்கத்தின் தவறை கவர்னர் தட்டிக் கேட்பவராக இருக்கிறார் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

குஷ்பு பேட்டி

கன்னியாகுமரியில் நடந்த சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழாவில் பா.ஜனதா தேசியக்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு பங்கேற்றார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

சுவாமி விவேகானந்தரை பின்பற்றவில்லை என்று கூறினாலும் ஏதோ ஒரு விஷயத்தில் அவரை பின்பற்றிக் கொண்டு தான் இருக்கிறோம்.

மதத்தை சாதகமாக...

இந்துத்துவாவை பற்றி எதிர்க்கட்சிகள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் மட்டும் தான் எதிர்க்கட்சியினருக்கு பூனூல், கோவில் ஞாபகத்திற்கு வரும். சாதியை வெளிப்படுத்துவார்கள்.

மதத்தை ஓட்டு வங்கியாக மாற்ற அந்த நேரத்தில் மக்களை முட்டாளாக்குகிறார்கள். மக்களின் ஓட்டு வேண்டும் என்பதற்காக மதத்தை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

கவர்னர் விஷயத்தில் எல்லாமே தவறாகத்தான் இருக்கிறது. நீங்கள் அரசாங்கம் நடத்துகிறீர்கள் என்றால் அதற்கு மேல் கவர்னர் இருக்கிறார். அரசாங்கத்தை மேற்பார்வை செய்யவும், தவறு நடந்தால் தட்டி கேட்பவராகவும் கவர்னர் இருக்கிறார். சட்டசபையில் இருந்து கவர்னர் போகும்போது அவரை அமைச்சர் பொன்முடி சைகை காட்டினார். அது எவ்வளவு பெரிய தவறு. இதற்கு முன்பு பெண்கள் பஸ்சில் ஓசியில் போவதாக பொன்முடி சொன்னார். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை. தற்போதும் அதே நிலை தான். அப்படி எனில் கவர்னருக்கு என்ன மரியாதை கொடுக்கிறீர்கள்?

சர்ச்சைக்குரிய வசனம்

தமிழகம், தமிழ்நாடு இரண்டுக்குமே வித்தியாசம் இல்லை என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி சொன்னபோது ஏன் கண்டிக்கவில்லை. ஏன் கோஷம் போடவில்லை.

சேதுசமுத்திர திட்டம் கொண்டு வர தனி தீர்மானத்தை முதல்-அமைச்சர் கொண்டு வருகிறார். அதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் கூறியதை நாங்கள் ஆதரிக்கிறோம். துணிவு படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் வருவதாக கூறுகிறீர்கள். ஆனால் நான் இன்னும் படம் பார்க்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story