கவர்னர் ஒப்புதல் அளிக்க மறுத்தது ஏற்புடையதல்ல


கவர்னர் ஒப்புதல் அளிக்க மறுத்தது ஏற்புடையதல்ல
x

அமைச்சர்களின் இலாகா மாற்றத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க மறுத்தது ஏற்புடையதல்ல என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.

விருதுநகர்


அமைச்சர்களின் இலாகா மாற்றத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க மறுத்தது ஏற்புடையதல்ல என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.

மாணவர் சேர்க்கை

இதுகுறித்து சாத்தூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:-

தமிழகத்தில் கிராமப்புற அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. சாத்தூர் மற்றும் சின்னகாமன் பட்டியில் அரசு பள்ளிகளில் சிறப்பாக தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு எம்.பி. விருது வழங்கப்பட்ட நிலையில் அப்பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநிலத்தில் அமைச்சர்களின் துறைகளை மாற்றியமைக்க முதல்-அமைச்சருக்கு உரிமை உள்ள நிலையில் அதனை முறையாக தெரிவித்தும் அதனை கவர்னர் ஏற்க மறுத்தது ஏற்புடையதல்ல. கடந்த 2005-ல் குஜராத்தில் மோடி முதல்-அமைச்சராக இருந்தபோது அமித்ஷா ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் இலாகா இல்லாத அமைச்சராக செயல்பட்டார்.

கைப்பாவை

ஆனால் தற்போது தமிழக கவர்னர் இதுகுறித்து கேள்வி கேட்டது வியப்பாக உள்ளது. சி.பி.ஐ. மத்திய உள்துறை மந்திரியின் கைப்பாவையாக செயல்பட்டு வரும் நிலையில் முதல்-அமைச்சர் தமிழகத்திலும் சி.பி.ஐ. அமைப்பு அனுமதி பெற்று தான் தலைமைச் செயலகத்தின் சோதனை நடத்த வேண்டும் என்ற விதிமுறையை ஏற்படுத்தி உள்ளது பாராட்டத்தக்கது. அமலாக்கத்துறை தலைமை செயலகத்தில் சோதனை நடத்தியது தமிழகத்தின் மீது செய்த தாக்குதலாகும்.

இந்த நடவடிக்கைகளுக்கு சரியான பதிலை வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் அளிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவிகளுக்கு விருது

முன்னதாக சின்னக்காமன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, சாத்தூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 பொது தேர்வில் முதல் 3 இடங்கள் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு எம்.பி. மாணிக்கம் தாகூர், எம்.பி. விருதினை வழங்கினார்.

சாத்தூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றதற்காக தலைமை ஆசிரியை மெர்சிக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன், நகரசபை தலைவர் குருசாமி, முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கடற்கரை ராஜ், யூனியன் தலைவர் நிர்மலா, மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம், நகர காங்கிரஸ் தலைவர் ஐயப்பன், மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜோதிநிவாஸ், சின்ன காமன்பட்டி பஞ்சாயத்து தலைவர் சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story